உலகப் பெண்கள் தினம்பற்றி-மிக
உயர்ந்த மேடையில் பறைசாற்றி
திலகம் அடடா அவரென்றே-நாம்
தினமும் போற்றுதல் மிகநன்றே
ஆனால்
மகளிர்க் கென்றே ஒதுக்கீடும்-ஏனாம்
மக்கள் அவையில் குறுக்கீடும்
சகல கட்சிகள் ஒன்றாக-பெரும்
சாதனை நிகழ்த்த நன்றாக
புகல என்னத் தடையிங்கே-ஆண்டுகள்
போனது பலவே விடையொங்கே
மகளிர் கென்றே தனிக்கட்சி-உடன்
மகளிர் தொடங்கின் வருமாட்சி
தொடங்க வேண்டும் இக்கணமே-மெகா
தொடரும் முடியும அக்கணமே
அடங்கும் ஆணின் ஆதிக்கம்-பெண்கள்
அணியெனத் திரண்டால சாதிக்கும்
செய்வீரா--?
புலவர் ச இராமாநசம்
உயர்ந்த மேடையில் பறைசாற்றி
திலகம் அடடா அவரென்றே-நாம்
தினமும் போற்றுதல் மிகநன்றே
ஆனால்
மகளிர்க் கென்றே ஒதுக்கீடும்-ஏனாம்
மக்கள் அவையில் குறுக்கீடும்
சகல கட்சிகள் ஒன்றாக-பெரும்
சாதனை நிகழ்த்த நன்றாக
புகல என்னத் தடையிங்கே-ஆண்டுகள்
போனது பலவே விடையொங்கே
மகளிர் கென்றே தனிக்கட்சி-உடன்
மகளிர் தொடங்கின் வருமாட்சி
தொடங்க வேண்டும் இக்கணமே-மெகா
தொடரும் முடியும அக்கணமே
அடங்கும் ஆணின் ஆதிக்கம்-பெண்கள்
அணியெனத் திரண்டால சாதிக்கும்
செய்வீரா--?
புலவர் ச இராமாநசம்
//தொடங்க வேண்டும் இக்கணமே-மெகா
ReplyDeleteதொடரும் முடியும அக்கணமே
அடங்கும் ஆணின் ஆதிக்கம்-பெண்கள்
அணியெனத் திரண்டால சாதிக்கும்
செய்வீரா--? ///
ஐயா இருக்கும் குழப்பங்கள் போதாதா !! இன்னொன்றா ...
உங்கள் அழகு தமிழில் மெகா தொடருக்கு முடிவு கட்டிய விதம் அழகு
ReplyDeleteநல்ல தமிழில்
ReplyDeleteநல்ல கருத்துள்ள
நல்ல கவிதைகளை தரும்
நல்ல புலவர்தனை
வாழ்த்த வார்த்தையில்லை ஆனால்
வணங்க கைகள் உண்டு
வணங்குகிறேன் ஐயா
உங்களையும் உங்களின்
தூய, தேன் தமிழையும்
நல்ல கவிதை....
ReplyDelete//////
ReplyDeleteமகளிர் கென்றே தனிக்கட்சி-உடன்
மகளிர் தொடங்கின் வருமாட்சி /////
இங்க வந்திடுச்சிங்க..
மகளிர் ஆட்சி...
உலகப் பெண்கள் தினத்தில், அம்மாவின் கடைக் கண் பார்வையின் மூலம் அரசியலில் விடிவினையும், ஆணின் ஆதிக்கத்தை அடக்கிடப் பெண்கள் அணி திரள வேண்டும் எனும் கூற்றினூடாகவும் பெண்களின் வலிமையினை உலகிற்கு உரைக்கும் அறை கூவலாக உங்களின் கவிதை அமைந்திருக்கிறது.
ReplyDelete