மேதினி போற்றும் மேதினமே-உன்
மேன்மைக்கே களங்கம் இத்தினமே
தேதியே ஆமது பதினெட்டே-ஈழர்
தேம்பி அலற திசையெட்டே
வீதியில் இரத்தம் ஆறாக-முள்ளி
வாய்கால் முற்றும சேறாக
நீதியில் முறையில் கொன்றானே-அந்த
நினைவு நாளே துக்கதினம்
உலகில் உள்ள தமிழரெங்கும்-அன்று
ஒன்றாய் கூடி அங்கங்கும்
அலகில் மெழுகு ஒளியேந்தி-பெரும்
அமைதியாய் நெஞ்சில் துயரேந்தி
வலமே வருவார் ஊரெங்கும்-மனம்
வருந்த மக்கள் வழியெங்கும்
திலகம் வீரத் திலகமவர்-உயிர்
துறந்த தியாக மறவர்
முள்ளி வாய்க்கால் முடிவல்ல-ஏதோ
முடிந்த கதையா அதுவல்ல
கொள்ளி வைக்கவும ஆளின்றி-மொத்த
குடும்பமே அழிந்த நாளன்றோ
புள்ளி விவரம் ஐ.நாவே-அறிக்கை
புகன்றதே நாற்பது ஆயிரமே
உள்ளம் குமுற அழுகின்றார்-கூடி
உலகத் தமிழர் தொழுகின்றார்
அகிலம் காணாக் கொடுமையிதே-நாம
அறிந்தும் அமைதியா-? மடமையதே
வெகுள வேண்டும் தமிழினமே-எனில்
வீரம் விளையாக் களர்நிலமே
நகுமே உலகம் நமைக்கண்டே-வெட்கி
நம்தலை தாழும் நிலையுண்டே
தகுமா நமக்கு அந்நிலையே-மாறும்
தமிழகம் பொங்கின் சூழ்நிலையே
புலவர் சா இராமாநுசம்
கொள்ளி வைக்கவும ஆளின்றி-மொத்த
ReplyDeleteகுடும்பமே அழிந்த நாளன்றோ
நெஞ்சம் பதறும் வரிகள்..
இது போன்ற துக்கத்தை எப்படி மறக்க?வலி நிறைந்த வரிகள்.
ReplyDeleteஆடிக்கறுப்பு என்றோம்.இப்போ மே 18...தொடருமா இன்னும் நாட்காட்டிகளில் ஈழத்தமிழனின் நினைவுத்தடங்கள் !
ReplyDelete// தேம்பி அலற திசையெட்டே
ReplyDeleteவீதியில் இரத்தம் ஆறாக-முள்ளி
வாய்கால் முற்றும சேறாக
நீதியில் முறையில் கொன்றானே-அந்த
நினைவு நாளே துக்கதினம்//
மனதை குத்தி கிழித்த வரிகள் அய்யா
சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை
தாய்த் தேச உறவுகளின் எழுச்சி வேண்டிய வலிகளைத் தாங்கிய கவிதைக்கு ஒரு முறை தலை தாழ்த்துகிறேன்.
ReplyDelete