Wednesday, June 15, 2011

குருடாகிப் போனதா--சர்வதேசம்




குருடாகிப் போகவில்லை சர்வதேசம்-அதை
குருடாக செய்ததுவே நமதுதேசம்
திருநாடாய் தனிஈழம் மலரும்நேரம்-சிங்கள
திருடருக்கே துணையாக நெஞ்சில்ஈரம்
ஒருநாளும் அணுவளவும் இன்றிநாமே-வலிய
ஓடிப்போய் உதவிகளை செய்ததாமே
வருநாளில் வரலாறும் காணுமிதனை-கண்ணில்
வரநீரும் காரணமே கையாமதனை

எண்ணுங்கள் எவராலே ஈழநாசம்-அங்கே
ஏற்படவும் காரணமா சர்வதேசம்
மண்ணுள்ளே குவியலென மனிதவுடலை-மூடி
மறைக்கின்ற படம்வந்தும் துயரப்படலே
கண்ணுள்ளே பட்டாலும கைகளமூட-தமிழன்
கல்நெஞ்சம கொண்டானே இதயம்மூட
இங்கே
எண்ணுங்கள் என்செய்யும சர்வதேசம-இந்த
இழிநிலைக்குக் காரணமே நமதுதேசம்

புலவர் சா இராமாநுசம்

8 comments:

  1. உணர்வுக் கொந்தளிப்பு கவிதைகளில்
    அப்படியே பிரதிபலிக்கிறது
    இந்த இழி நிலைக்கு காரணமே
    நம் தேசம் என்பது
    சத்தியமான வார்த்தை
    மிகச் சரியாகச் சொன்னால்
    தமிழர்களாகிய நாம்தான்
    என்பதுதான் உண்மை
    உண்ர்வு பூர்வமான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. எண்ணுங்கள் என்செய்யும சர்வதேசம-இந்த
    இழிநிலைக்குக் காரணமே நமதுதேசம்

    அக்னி பிரவாகமாய்
    புறப்பட்ட வார்த்தைகள்
    சூரியனை போ(ய்)ல்
    சுட்டெரிக்கிறது

    அந்த கொசுவை நசுக்க எதற்கையா
    சர்வதேசம்
    நம் தமிழர் படை போதாத என்ன ??

    ReplyDelete
  3. //எண்ணுங்கள் என்செய்யும சர்வதேசம-இந்த
    இழிநிலைக்குக் காரணமே நமதுதேசம் //

    நெஞ்சைப் பிளக்கும் நிதர்சனம்!

    ReplyDelete
  4. //மண்ணுள்ளே குவியலென மனிதவுடலை-மூடி
    மறைக்கின்ற படம்வந்தும் துயரப்படலே
    கண்ணுள்ளே பட்டாலும கைகளமூட-தமிழன்
    கல்நெஞ்சம கொண்டானே இதயம்மூட//

    துயரத்தின் சுவடுகள் மறைவதில்லை.மறைக்கபடப்பார்க்கிறது

    உணர்வைதூண்டி எழுப்பும் வரிகளாய்.மிக அருமையாக இருக்கிறது கவிதை. வாழ்த்துகள் அய்யா..

    ReplyDelete
  5. புலமைக்கு ஏற்றாற் போல இயல்பாய் வருகிறது எதுகை மோனை.

    தொடருங்கள்.

    ReplyDelete
  6. எண்ணுங்கள் என்செய்யும சர்வதேசம-இந்த
    இழிநிலைக்குக் காரணமே நமதுதேசம்//

    ஐயா உங்கள் தேசத்தில் தான் தவறு என்று நீங்கள் மனம் விட்டுச் செல்லும் இந்த வார்த்தையை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.
    ஒருவர் மட்டும் அடிக்க்கவில்லை, பத்து நாடுகளின் பலத்தோடு தான் இலங்கையின் போர் இடம் பெற்றது.

    சீனா, இஸ்ரேல்,பாகிஸ்தான், இந்தியா, எனப் பல நாடுகள் ஐயா.
    உங்களை மட்டும் தாழ்த்துவது இங்கே எவ் வகையில் நியாயம்?

    ReplyDelete
  7. நம்பிக்கையோடு, ஈழ மக்கள் மீதான உல நாடுகளின் பாராமுகத்தினையும் உங்கள் கவிதை அழுத்தமாகச் சொல்லி நிற்கிறது.

    ReplyDelete
  8. முதல் இரண்டு வரிகளிலேயே மொத்த கவிதையும் புரிந்தது. சுருக்கமாய், சிறப்பாய்!!!

    ReplyDelete