தொலைந்தது மீண்டும் வந்ததுவே-கனவில்
தொல்லையா இன்பம் தந்ததுவே
கலைந்தது அந்தோ தூக்கம்தான்-அவளை
கண்முன காணா ஏக்கந்தான்
விளைந்தது மீண்டும் கனவுவர-அவள்
விட்டுச் சென்றதை நினவுதர
அலைந்தது அந்தோ மனம்வீணே-முக
அழகில் காண்பது மிகநாணே
என்னுள் அவளே இருந்தாலும்-நல்
இருவிழி தந்திடும் மருந்தாலும்
பொன்னுள் பதித்த மணிபோல-தினம்
புலம்பும் நெஞ்சின் பிணிமாள
மன்னும் உயிரும் உடலோடு-அவள
மறுத்தால வாழ்வே சுடுகாடே
இன்னும எதறகோ நடிக்கின்றாள்-தன்
இதயம் திறக்க மறுக்கின்றாள்
எத்தனை காலம் ஆனாலும்-என்
இளமை அழிந்து போனாலும்
சித்தமே சற்றும கலங்காது-விருப்பம்
செப்பிடும் வரையில் தூங்காது
இத்தரை தன்னில் வாழ்ந்திடுவேன்-நான்
இறுதியில் ஒருநாள் விழ்ந்திடுவேன்
பத்தரைப் பொன்னே நீவருவாய்-தீரா
பழியும் வருமே வாய்திறவாய்
புலவர் சா இராமாநுசம்
எத்தனை காலம் ஆனாலும்-என்
ReplyDeleteஇளமை அழிந்து போனாலும்
சித்தமே சற்றும கலங்காது-விருப்பம்
செப்பிடும் வரையில் தூங்காது
இத்தரை தன்னில் வாழ்ந்திடுவேன்-நான்
இறுதியில் ஒருநாள் விழ்ந்திடுவேன்
ஐயா நல்லாயிருக்குங்க..
மிக அருமையான கவி அண்ணா!
ReplyDelete(ஐயா என்றழைக்க தோன்றுகிறது. என்வயது ஐந்து தசாப்தம் தாண்டிவிட்டதால் தங்கள் வயதை கூடுதலாக்கிவிடக்கூடாதே!)
மரபுக்கவிதை மதுரக் கவியாகிக் கிடக்கின்றது! வாழ்க!!
மன்னும் உயிரும் உடலோடு-அவள
ReplyDeleteமறுத்தால வாழ்வே சுடுகாடே
இன்னும எதறகோ நடிக்கின்றாள்-தன்
இதயம் திறக்க மறுக்கின்றாள்
சொல்லா அவள்
பொல்லா காதலை
ஆளுமையாய் இன்னும்
அருமையாய் சொன்ன
விதம் கண்டு பணிகிறேன் - உங்கள்
பதம் ஐயா
இன்றுதான் தங்கள் கவிதைப் பூங்காவினுள்
ReplyDeleteநுழைந்தேன் மெய்மறந்தேன்
தொடர்ந்து பதிவுகளைப்படிக்க படிக்க
மலைத்துப்போனேன்
நல்ல் வழிகாட்டியாக தங்கள் பதிவு
இருப்பதால் இன்று என்னை
இணைத்துக்கொண்டுள்ளேன்
வாழ்க நலமுடனும் தமிழுடனும்..
எத்தனை காலம் ஆனாலும்-என்
ReplyDeleteஇளமை அழிந்து போனாலும்
சித்தமே சற்றும கலங்காது-விருப்பம்
செப்பிடும் வரையில் தூங்காது //
சபாஷ்...இன்றும் இளமைத் துடிப்போடு உங்கள் கவிதைகள் இருக்கின்றன என்பதற்குச்ச் சான்றாக இவ் வரிகள்..
நினைவுகளைக் கனவினூடாகத் தரிசித்து வாழும் ஒரு கவிஞனின் உள்ளத்து உணர்வுகளாக இந்தக் கவிதை வந்திருக்கிறது.