முத்துப் போன்ற தீர்மானம்-நம்
முதல்வர் காத்தார் தன்மானம்
ஒத்துப் போக அனைவருமே-நல்
ஒற்றுமை காட்டி தமிழினமே
சத்தாம் வழிவகை வடித்தாரே-புகழ்
சரித்திர முடிவு எடுத்தாரே
பத்தொடு ஒன்றா ?இதுவல்ல-இந்த
பாட்டில் முழுவதும் நான்சொல்ல
அருளாதாரம் அணு அளவும்-என்றும்
அறியா பக்சே உள்ளளவும
பொருளாதார தடை ஒன்றே-சிங்களர்
போக்கினில் மாற்றம் தருமென்றே
ஒருநாள் கூட எண்ணாதீர்-வந்த
ஒற்றுமை கெடவே பண்ணாதீர்
திருநாள் காணின் தனிஈழம்-எட்டுத்
திசையும் தமிழினப் புகழ்பாடும்
ஒன்றே செய்யினும் நன்றாமே-அதை
உடனே செய்தீர் இன்றாமே
குன்றே எதிரே மறித்தாலும-கை
குறுக்கே குழியே பறித்தாலும
நின்றே முதல்வர் ஆய்வீரா-ஈழம்
நிலைக்க ஆவன செய்வீரா
வென்றே வந்தீர் நீர்வாழ்க-ஈழம்
வென்றிடும் வழிதனை நீர்சூழ்க
புலவர் சா இராமாநுசம்
//வென்றே வந்தீர் நீர்வாழ்க//
ReplyDeleteஅருமையான வாழ்த்து,கவிதை வடிவில்!
விருத்தத்தில் முதல்வருக்கு விண்ணப்பம் வைத்துள்ளீர்கள்.
ReplyDeleteமுதல்வரின் ஒளிப் பார்வை எம் மீதும் தெறித்தால் சந்தோசமே.