Monday, June 6, 2011

என் தாய்மொழி


எம்மொழி உமது தாய்மொழி யென்றே
என்னிடம் கேட்டால் சொல்வது ஒன்றே
செம்மொழி அம்மொழி செப்பிட இன்றே
செந்தமிழ் ஆகுமே செகமதி லின்றே

என்றும் இளமை குன்றா மொழியே
ஈடே இல்லா தமிழரின் விழியே
நன்றே இலக்கியம் இலக்கணம் கண்டே
நானிலம் போற்றும் வளமையும் உண்டே

கன்னித் தமிழாம் கனியின சுவையாம்
காலத்தால் என்றும் அழியா மொழியாம்
என்னுள் வாழ்ந்தே கவிதை வழியாம்
எழுத்தென வந்திடும் இயலிசை மொழியாம்

இன்னல் பலபல எய்திய போதும்
எதிரிகள் செய்திட கலப்பட தீதும
கன்னல் தமிழே கலங்கிய தில்லை
காத்தாய் நீயே தனித்தமிழ் எல்லை

புலவர் சா இராமாநுசம்

2 comments:

  1. இணையில்லா தமிழை
    ஈடிலா வார்த்தைகளில்
    எழுதிய விதம்
    கம்பீரம் ஐயா

    ReplyDelete
  2. இன்னல் பலபல எய்திய போதும்
    எதிரிகள் செய்திட கலப்பட தீதும
    கன்னல் தமிழே கலங்கிய தில்லை

    அதுதானே ஐயா உயர்த்தனிச் செந்தமிழ் மொழியின் சிறப்பு..

    நன்றாகவுள்ளது.

    ReplyDelete