Sunday, May 22, 2011

தியாகம்

தியாகம் தியாகமென -காந்தி
தினமும செய்தார் யாகமென
யோகம் சிலருக் கதனாலே -அதனை
சொல்ல வந்தேன் இதனாலே
போகம் கருதி சுகம்தேடி-அவர்
புகுந்தார் அரசியியல் தனைநடி
தாகம் இன்னும் தணியவில்லை-தினம்
தந்திடும துயருக் குண்டோஎல்லை

பெற்ற விடுதலை பறிபோகும-அதைப்
பேணிக் காக்கும நெறிகூறும
கற்றவர் கூட ஏனோதான்-ஏதும்
கவலையற்றே வீணே தான்
மற்றவர் வேலையே பார்க்கின்றார்-கேட்டால
மனதைமுடி மறைக் கன்றார்
அற்றவர் வாழ்வே போராட்டம்-என
ஆனது ஆட்சி தேரோட்டம

எத்தனை காலம் இப்படியே-ஆள்வோர்
எடுத்து வைத்தால தப்படியே
அத்தனை வகையும் ஒன்றாக-சேரின்
அழிவும் வருமே நன்றாக
மெத்தனம் வேண்டாம் கட்சிகளே-இனி
மேலும் வேணாம் சாட்சிகளே
புத்தரைப் போல தெளியுங்கள்-நல்லோர்
போற்ற ஆடசியை அளியுங்கள்

புலவர் சா இராமாநுசம்

4 comments :

  1. தியாகம் கவிதையைப் படித்தேன். அது ஒருபடித் தேன். நல்ல ஓசை நயம் மிக்க, சொல்லாலுமை மிக்க கவிதை. அங்கங்கே தட்டச்சுப் பிழைகள் உள்ளன. அவற்றை சரிசெய்ய வெண்டுகிறேன். 'புத்தரைப் போலத் தெளியுங்கள்-நல்லோர் போற்ற ஆட்சியை அளியுங்கள்' ---அழகிய அருமையான கருத்தாழமிக்க வரிகள் வாழ்க கவிஞரே!

    புகுந்தார் அரசி---யி---யல் தனைநடி
    பெற்ற விடுதலை பறிபோகு---ம---அதைப்
    பார்க்கின்றார்-கேட்டா---ல ---
    எடுத்து வைத்தா---ல--- தப்படியே

    ReplyDelete
  2. வேர்டு வெரிஃபிகேசனை நீக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete
  3. தங்களின் இந்த மரபுக்கவிதைத் தளத்தை எனது அகரம் அமுதா வலையில் நான் விரும்பிப் படிப்பவையில் இணைத்திருக்கிறேன் தாங்கள் ஒத்தேற்பீர்கள் என்கிற நம்பிக்கையில். நன்றி

    ReplyDelete
  4. போகம் கருதி சுகம்தேடி-அவர்
    புகுந்தார் அரசியியல் தனைநடி
    தாகம் இன்னும் தணியவில்லை-தினம்
    தந்திடும துயருக் குண்டோஎல்லை

    உண்மையின் தரிசனம் .மிக்க நன்றி ஐயா
    அழகிய கவிதவரிக்கு .முடிந்தால் வாருங்கள்
    இன்றும் ஓர் புரட்சிக் கவிதை காத்திருக்கின்றது
    உங்கள் கருத்திற்க்காய் .

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...