Friday, May 27, 2011

நீயா நானா

நீயா நானா விளையாட்டே-தேர்தல்
நெருங்க நெருங்க தமிழ்நாட்டில்
காயா பழமா விளையாட்டும்-அந்தோ
கண்டோம இந்த தமிழ்நாட்டில்
தாயா பிள்ளையா இருந்தாரும்-இங்கே
தனியாய் தனியாய் பிரிந்தாரும்
வாயா போயா விளையாட்டும் -மேலும்
வளரந்து நாளும் களைகட்டும்

மட்டைப் பந்து விளையாட்டே-அது
மட்டுமா சிறந்த விளையாட்டே
திட்ட மிட்டே ஆடுகின்றார்-பொருள்
தேடிட சூதையும் நாடுகின்றார்
வெட்ட வெளிச்சம் ஆனபின்பும்-எதற்கு
வீணே நீயா நானென்றல்
இட்டம் போல ஆடட்டும் -இனி
எப்படி யேனும போகட்டும்

எங்கும் எதிலும் இதுவேதான்-உலகு
எங்கும் காணல் இதுவேதான்
பொங்கும் உணர்வே இதுவேதான்-தினம்
போட்டியில் பார்ப்பது இதுவேதான்
தங்குத் தடையே இல்லாமல்-நாளும்
தயங்கி எதுவும் சொல்லாமல
இங்கே நானும் எழுதுவதும்-என்னுள்
இருப்பது நீயா நானன்றோ

புலவர் சா இராமாநுசம்

2 comments :

  1. நடக்கும் விளையாட்டுகளில்
    நடக்கும் சூதாட்ட சூழ்ச்சியை
    தித்திக்கும் கருத்துக்களால்
    எத்திக்கும் பரவவிட்டிருகிறீர்கள்

    நன்றிகள் அய்யா

    ReplyDelete
  2. அரசியல் மேடையின் பின்னே நிகழும் சூதாட்ட நிகழ்வினை அழகாக்ச் சாடியுள்ளது உங்கள் கவிதை.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...