Thursday, May 26, 2011

தேசியம்

தேசியம் என்றாலே பொருளறிய தாரே
தேசியம் பேசுவதா திருத்துவது யாரே
பேசியும் கண்டித்தும் தீராத ஒன்றே
தினந்தோறும் மீனவரின் துயரமது இன்றே
கூசாதா அரசுக்கு தேசியம் பேச
கொட்ட கொட்ட குனிவதா கேலியவர்பேச
பேசாதீர் இந்திய தேசியம் பற்றி
பரவட்டும் எதிர்ப்பென்னும தீநம்மை-சுற்றி


புலவர் சா இராமாநுசம்

1 comment :

  1. ஆகா ..........
    அற்புத கவிதை ஐயா
    தேசியம் தமிழனுக்கு மட்டும் சொந்தமா என்ன
    எல்லா இந்தியனுக்கும் பொதுவானது தானே
    ஆனால் தமிழக மீனவன் மட்டும் தனித்து விடப்படுவது நியாயமா?
    இல்லை அதுதான் தேசியமா ?

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...