Saturday, May 21, 2011

இறுதி மூச்சுள்ளவரை...

இறுதி முச்சு உள்ளவரை-நம்
இதயம் எண்ணம் எண்ணும்வரை
உறுதி நீயும் கொள்வாயா-தனி
ஈழம் தானென சொல்வாயா
குருதிசிந்த கணக் கற்றோர்-அங்கே
குழந்தை குட்டி தனைப்பெற்றோர்
இறுதிச் சடங்கும் ஆளின்றி -செய்ய
இறந்தோர் தம்மை மறப்பாயா

முள்ளி வய்கால் படுகொலையை-நம்
மூச்சும் பேச்சும் உள்ளவரை
சொல்லி ஒன்றாய் நம்மவரை-உடன்
சேரச் செய்தே அறப்போரை
ஒல்லும் வகையெலாம் சொய்வோமே-இந்த
உலகம் உணர உய்வோமே
தள்ளி நின்ற நம்மவரும்-தம்
தவறை உணரந்து வருவரே

அடங்கிப் போனோம் நாமன்றே-ஆளும்
ஆணவ ஆடச்சியை நாம்வென்றே
முடங்கிப் போக வைப்போமே-இறுதி
மூச்சையும் பணயம் வைப்போமே
ஒடுங்க மாட்டோம நாமென்றே-அவர்
உணர எதிர்த்து தினம்நின்றே
நடுங்கச் செய்வதே நம்வேலை-நம்
இறுதிமூச்சு உள்ள வரை

புலவர் சா இராமாநுசம்

2 comments:

  1. அருமை அருமை. தாங்கள் எத்தனை ஆழமான ஈழப்பற்றோடு இருக்கிறீர்கள் என்பது இக்கவிதையின் வழி வெளிப்படுகிறது.

    இறுதி முச்சு உள்ளவரை-நம்
    இதயம் எண்ணம் எண்ணும்வரை
    உறுதி நீயும் கொள்வாயா-தனி
    ஈழம் தானென சொல்வாயா
    குருதிசிந்த கணக் கற்றோர்-அங்கே
    குழந்தை குட்டி தனைப்பெற்றோர்
    இறுதிச் சடங்கும் ஆளின்றி -செய்ய
    இறந்தோர் தம்மை மறப்பாயா

    என்னை மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டிய வரிகள் இவை. வாழ்க கவிஞரே

    தங்களின் ஈழம் சார்ந்த கவிதைகளை ஈழ நேசன் http://mullai.org/ இன்ற இந்தத் தளத்தில் தொடர்ந்து வெளியிட வேண்டுகின்றேன்.

    "Eelanation: editor" என்ற இந்த முகவரிக்குக் கவிதைகளை அனுப்புங்கள்.

    ReplyDelete
  2. editor@eelanation.com என்ற இந்த முகவரிக்குக் கவிதைகளை அனுப்புங்கள்.

    ReplyDelete