Wednesday, May 18, 2011

பள்ளிக்கூடம்

பள்ளிக் கூடம் படிப்பதற்கா-பெரும்
பணத்தைத் தேடி எடுப்பதற்கா
உள்ளம் தொட்டு சொல்வாரா-இங்கே
உரைப்பதை காதில் கொள்வாரா
வெள்ளிப் பணமே தினம்கேட்டே-பெற்றோர்
வேதனை தன்னை இப்பாட்டே
சொல்லில் விளக்க வாய்பாக-தலைப்பூ
சொல்லிய வார்ப்புக்கே முதல்நன்றி

தனியார் பள்ளிகள் முதலாளி-பாடம்
தந்திடும் 'ஆ'சிரியர்தாமே தெழிலாளி
இனியார் எவரும் பணம்தேட-பள்ளி
ஏற்றதாய் எண்ணம் மனதோட
கனிவாய் சொல்லல் இதுஒன்றே -தம்
கல்விப் பணியாம் அதுவென்றே
பிணியாய் ஆனதே இந்நாளில்=இப்படி
பிழைப்பும மறைவது எந்நாளில்

ஏழைகள் கல்வி கற்பதற்கே-இன்று
இருப்பது அரசுப் பள்ளிகளே
பேழையுள் பணமே உள்ளவர்கள்-தேடிப்
போவதே தனியார் பள்ளிகளே
கோழைகள் நடுத்தர குடும்பங்கள-படும்
கொடுமைகள் தமக்கோர் அளவில்லை
ஏழையும பேழையும் இல்லாதார்-பாபம
எதிர்த்து எதுவும சொல்லாதர்
எனவே
வாழவழியும அவர்க் குண்டா-கல்வி
வளர்க்கச் செய்திடும் அருந்தொண்டா
சூழும் சற்றே ஓய்வாக -இங்கே
சொன்னதை முற்றும் ஆய்வாக
பாழும் ஏழை பணக்காரர்-என்ற
பாகு பாடே குணக்கேடாம்
வீழும் கல்வி வளர்சிதான்-இது
வேண்டுமா தனியார் பள்ளிகளே

புலவர் சா இராமாநுசம்

6 comments :

  1. அருமையான கவி படைக்கும் தங்களின் கவிதைகளை பார்க்க சற்று மனம் தடுமாறுகிறது. நான் மரபு கவிதைகளை சரி பிழை தெரியாமல் எப்படியோ எழுதி கொண்டிருக்கிறேன். இந்த அழகான கவிகளை பார்த்து திருந்திக் கொள்ளடா என மனம் என்னை உதைக்க..
    ரசிக்கிறேன் தங்கள் கவிமலர்களை!

    ReplyDelete
  2. நான் ஒருமுறை இப்படி எழுதினேன். இந்தக் கல்விநிறுவனங்களைப் பார்த்து.

    கற்க கசடறக் கற்பவை கற்றபின்
    விற்க அதற்குத் தக.

    எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டைப்
    பண்ணென்ப விற்றுப் பணம்.

    இவைதான் இப்பொழுது நினைவிலுள்ளது. கல்வி என்கிற தலைப்பிலான வள்ளுவரின் பத்துக் குறள்களையும் மேலுள்ளவாறு மாற்றி எழுதினேன். தங்களின் பள்ளிக்கூடம் என்ற தலைப்பிலான கவிதை அருமை. வாழ்க.

    ReplyDelete
  3. வேர்டு வெரிபிகேசனை நீக்குக

    ReplyDelete
  4. அன்பின் இராமாநுசம் - இன்றைய பள்ளிகளின் உண்மை நிலையினை அழகுற எடுத்தியம்பும் கவிதை - கோபமா இல்லை ஒன்றும் செய்ய இயலவில்லையே என்ற ஆதங்கமா ? நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  5. அன்பின் இராமாநுசம் - தட்டச்சுப் பிழைகளாக - ஒற்றுப் பிழைகள் வருகின்றனவே ! வெளியிடும் முன்னர் ஒரு முறை படித்துப் பாருங்களேன். தவறாக நினைக்க வேண்டாம் - நல்வாழ்த்துக்ள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  6. அன்பரே
    தாங்கள் சுட்டியுள்ள ஒற்றுப் பிழைகள் மட்டுமல்ல, சந்தி்ப் பிழை,லகர ளகர,
    னகர ணகர வேறுபாடுகள் என பல இடங்களில்
    வந்துள்ளதை வலையில் வந்தபின்னரே கண்டு
    வருத்துவதைத் தவிர திருத்தும் தொழில நூட்பம்
    அறிகிலேன்
    மேலும், கவிதை எழுதும் போதுவரும்
    கருத்தோட்டமும், கண் பார்வையின் குறைபாடும்
    முதுமையும், முதுகு வலியும் கூட காரணமாகும்
    எனவே, தாங்கள் சுட்டியதை நான்
    தவறாகக் கருதும் பேச்சுக்கே இடமில்லை
    மேலும், என் சூழ்நிலையை விளக்க
    வாய்பாக, இது அமைந்தது நன்றி
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...